ODI WC 2023 | “ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் முக்கிய பங்கு வகிக்கும்” - கேப்டன் ரோஹித் சர்மா

கேப்டன் ரோஹித் சர்மா
கேப்டன் ரோஹித் சர்மா
Updated on
1 min read

பல்லேகலே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் முக்கியமானதாக இருக்கும். அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டையும் செய்யக்கூடியவர். கடந்த ஓராண்டில் அவர், மட்டை வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பந்துவீச்சும் நன்றாக இருந்து வருகிறது. இது எங்களுக்கு மிகவும் முக்கியம்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இணைந்து அபாரமாக பேட் செய்தனர். பந்து வீச்சிலும் பாண்டியா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர், பேட் செய்த விதம் அவருடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை காட்டியது. இது அணிக்கு சிறப்பான விஷயம்.

50 ஓவர் போட்டி வடிவம் வேறுபட்டது. உலகக் கோப்பை தொடரில் 9 லீக் ஆட்டம், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என 11 ஆட்டங்களில் விளையாட வேண்டியது இருக்கும். தொடக்க நிலைகளில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் மீண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தி மற்றும் ஒரு குழுவாக என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் கிடைக்கும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் குறைவான நேரமே கிடைக்கும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூச்சுவிடுவதற்கு இடமளிக்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணி திருப்தி அளிக்கிறது. இது ஒரு முழுமையான அணியாக திகழ்கிறது. அணித்தேர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் சமநிலை மற்றும் பேட்டிங் வரிசையின் ஆழம் ஆகியவற்றை பெற்றுள்ளோம். அதிகம் யோசித்துதான் இந்த அணியை அறிவித்துள்ளோம். இது எங்களது சிறப்பான அணிச்சேர்க்கையாகும். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in