ஆசிய கோப்பை போட்டியை பார்க்க பாகிஸ்தானுக்கு பிசிசிஐ தலைவர், துணைத் தலைவர் பயணம்

ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா
ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா
Updated on
1 min read

வாகா: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் போட்டியை பார்ப்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வரும் 6-ம் தேதி சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி லாகூரில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் இந்தப் போட்டியை பார்க்க பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னியும், துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லையான அட்டாரி-வாகா வழியாக அவர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

“நாங்கள் இலங்கையின் கொழும்பில் ஆசிய கோப்பை போட்டிகளை பார்த்தோம். அதுபோல பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியை பார்க்க உள்ளோம். பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுவதை பார்க்க உள்ளோம். கடைசியாக 2004-05 வாக்கில் பாகிஸ்தான் சென்றேன். அது இந்தியா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான லாகூரில் நடைபெற்ற கருத்தரங்கு. அந்த வகையில் எனது பயணத்தை எதிர்நோக்கி உள்ளேன்” என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in