Published : 04 Sep 2023 08:14 AM
Last Updated : 04 Sep 2023 08:14 AM
நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிநியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்தவரும், முதல்நிலை வீரருமான கார்லோஸ் அல்கரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டேனியல் இவான்ஸை வீழ்த்தினார்.
மற்ற 3-வது சுற்று ஆட்டங்களில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டி 6-3, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியையும், ரஷ்ய வீரர் ஆந்த்ரே ரூப்லேவ் 3-6, 6-3, 6-1, 7-5 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டர்நெக்கையும் வீழ்த்தினர்.
அடுத்த சுற்றில் சின்னர்: இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 6-3, 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான்வாவ்ரிங்காவையும், ஆஸ்திரேலிய வீரர் அலெக் டி மினார் 6-1, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சிலி நாட்டின் நிக்கோலஸ் ஜாரியையும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-7 (2), 7-6 (8), 6-1, 6-1 என்ற கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவையும், ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ் 6-2, 6-2, 7-6 (6) என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேஸையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் பிரிவு: மகளிர் பிரவில் 2-ம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீராங்கனை கிளாரா புரேலைச் சாய்த்தார். இதன் மூலம் அவர் மகளிர் பிரிவு 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் பிரிவு 3-வது சுற்றின் மற்ற ஆட்டங்களில் ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனை கிரீட் மினெனையும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 5-7, 6-2, 6-2 என்ற கணக்கில் ரஷ்யாவின் லுட்மிலா சாம்சனோவையும், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விட்டோலினாவையும்,
சீனாவின் ஜெங் கின்வென் 6-3, 4-6, 6-4 என்ற கணக்கில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டியையும், அமெரிக்க வீராங்கனை பெய்ட்ன் ஸ்டியர்ன்ஸ் 6-4, 6-3 என்ற கணக்கில் பிரிட்டன் வீராங்கனை கேட்டி பவுல்ட்டரையும், துனீசியாவின் ஆன்ஸ் ஜபூர் 5-7, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவையும், செக் குடியரசின் மார்க்கெட்டா வோன்ட்ரூஸ்சோவா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் எக்காடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT