

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பிரிவில் 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் ஹீனா சித்து, மலைகா கோயல் தகுதி பெற்றனர்.
கடந்த நவம்பரில் மியூனிக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த ஹீனா சித்து இன்று 383 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இவர் ஆஸ்திரேலிய வீராங்கனை லலிதா யாலியூஸ்கயா என்பவரை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு வீராங்கனை மலைகா கோயல் 378 புள்ளிகள் பெற்று கனடா வீராங்கனை லிண்டா கீய்க்ஜோவுடன் 3வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இருவரும் விளையாடும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் இன்றைய நாள் இறுதியில் நடைபெறும்.