UP டி20 லீக் | சூப்பர் ஓவரில் ஹாட்-ட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரிங்கு சிங்!

ரிங்கு சிங் மற்றும் மீரட் அணி வீரர்கள்
ரிங்கு சிங் மற்றும் மீரட் அணி வீரர்கள்
Updated on
1 min read

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் உபி டி20 கிரிக்கெட் லீக் தொடரின் போட்டியில் சூப்பர் ஓவரில் ஹாட்-ட்ரிக் சிக்ஸர்களை விளாசி தனது அணியை வெற்றி பெற செய்துள்ளார் ரிங்கு சிங்.

கான்பூர் கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஆக.31) நடைபெற்ற போட்டியில் மீரட் மேவ்ரிக்ஸ் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் விளையாடின. இரு அணியும் 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தன. போட்டி சமனில் முடிந்த காரணத்தால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் காசி ருத்ராஸ் அணி முதலில் பேட் செய்து 6 பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.

6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மீரட் மேவ்ரிக்ஸ் அணி பேட் செய்தது. அந்த அணிக்காக ரிங்கு சிங் மற்றும் திவ்யான்ஷ் ஜோஷி களம் இறங்கினர். ஸ்ட்ரைக்கை ரிங்கு சிங் எடுத்தார். முதல் பந்தை டாட் வைத்தார். லாங் ஆஃப், மிட் விக்கெட்டில் ஸ்லாக் ஸ்வீப், மீண்டும் லாங் ஆஃப் என வரிசையாக 3 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற செய்தார். அண்மையில் நடந்து முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங் விளையாடி இருந்தார்.

கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை பதிவு செய்து கவனம் ஈர்த்தவர். சிறந்த ஃபினிஷர் என அவரை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in