Published : 18 Dec 2017 02:16 PM
Last Updated : 18 Dec 2017 02:16 PM

ஜிக்னேஷ் மேவானி வெற்றி: பா.ரஞ்சித் வாழ்த்து

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழ்த் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்த்துகள் தோழர் ஜிக்னேஷ் மேவானி. தங்கள் வெற்றி பாசிஸத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முன்னேற்றம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

வட்காம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி 84,785 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சக்கரவர்த்தி விஜயகுமார் 65,946 வாக்குகளே பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x