Published : 26 Aug 2023 09:32 AM
Last Updated : 26 Aug 2023 09:32 AM

மகளிர் கால்பந்து தரவரிசை: ஸ்பெயின் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

சூரிச்: மகளிர் கால்பந்து தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

அதேவேளையில் அரைஇறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியை சந்தித்த சுவீடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

இரு முறை சாம்பியனான அமெரிக்கா 6 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக முதலிடத்தை இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணி உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவீடனிடம் தோல்வி அடைந்திருந்தது. இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்த ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து 4-வது இடத்தில் தொடர்கிறது.

பிரான்ஸ் அணி 5-வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றுடன் வெளியேறிய ஜெர்மனி 2-வதுஇடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஒலிம்பிக் சாம்பியனான கனடா 3 இடங்கள் பின்தங்கி 10-வது இடத்தை பிடித்துள்ளது. உலகக் கோப்பை தொடரை நடத்திய ஆஸ்திரேலியா 11-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x