உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி | கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா

கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா
கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா
Updated on
1 min read

பாகு: உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா.

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும் சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவை எதிர்கொண்டார். கிளாசிக்கல் ஆட்டமான இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். பிரக்ஞானந்தாவின் சில காய் நகர்த்தல்கள் கவனம் ஈர்த்தன.

கார்ல்சனுக்கு சம அளவில் போட்டியை அளித்தார் பிரக்ஞானந்தா. இதனால் ஆட்டம் சுவாரசியமாக சென்றது. இருவருமே ஒரு சேர ஆதிக்கம் செலுத்திய நிலையில் 35-வது காய் நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இறுதிப் போட்டியின் 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

பிராக்ஞானந்தா கூறும்போது, “இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் காய் நகர்த்தலில் நான் எந்த பிரச்சனையிலும் இருந்ததாக நினைக்கவில்லை” என்றார்.

கார்ல்சன் கூறும்போது, “இறுதிப் போட்டியின் 2-வது ஆட்டம் போரட்டமாக இருக்கும். பிரக்ஞானந்தா கண்டிப்பாக சவால் அளிப்பார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in