“விடியும் நல்ல வேளை” - குறிப்பால் உணர்த்தி பதிவிட்ட இந்திய வீரர் சஹல்

சஹல் | கோப்புப்படம்
சஹல் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விடியலுக்கு தான் காத்திருப்பதை எமோஜிக்களை பயன்படுத்தி ட்வீட் மூலம் குறிப்பால் அவர் உணர்த்தியுள்ளார்.

33 வயதான சஹல், வலது கை லெக் பிரேக் பந்து வீச்சாளர். கடந்த 2016 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 72 ஒருநாள் மற்றும் 75 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 217 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதில் 121 விக்கெட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தியவை. கடைசியாக கடந்த ஜனவரியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றி பவுலராக அறியப்படுகிறார். 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 5 சீசனில் 20+ விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அண்மையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார்.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த சூழலில் அஸ்தமிக்கும் சூரியன் நிச்சயம் உதிக்கும் என்பதை குறிக்கும் வகையில் எமோஜியை அவர் பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in