Published : 20 Aug 2023 06:32 AM
Last Updated : 20 Aug 2023 06:32 AM
சென்னை: மணிப்பூரில் இருந்து தமிழகத்தில் பயிற்சி பெற வந்துள்ள வீரர்கள் எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
அவர்கள் தமிழகத்தில் தங்கள் பயிற்சியைத் தொடங்குவதைக் கண்டு, நமது நெஞ்சங்கள் பெருமிதத்தால் பொங்குகின்றன. மணிப்பூரில் இருந்து தமிழகத்தில் பயிற்சி பெற வந்துள்ள 15 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் இப்போது எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர். இதுஎல்லைகளுக்கு அப்பால் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. நாம் ஒன்றிணைந்து, இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT