

கோவை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன் - இந்தியன் ரயில்வே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
கோவையில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன் 9 விக்கெட்கள் இழப்புக்கு 333 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 5 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இந்தியன் ரயில்வே தொடர்ந்து விளையாடியது.
அந்த அணி 103 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக சஹாப் யுவராஜ் 115 ரன்கள் விளாசினர். சுபம் சவுபே 69, பார்கவ் மேரை 26, ருத்ரா தண்டே 29 நிஷாந்த் குஷ்வா 53 ரன்கள் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன் 3 புள்ளிகளை பெற்றது. அதேவேளையில் இந்தியன் ரயில்வே அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.