

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற 16 வயது நைஜீரிய வீராங்கனை சிகா அமலாஹா மீது ஊக்கமருந்து புகார் எழுந்துள்ளது.
இதனால் 53கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மாட்சா சந்தோஷிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல் இதே பிரிவில் 4வது இடத்தில் முடிந்த மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்வாதி சிங் வெண்கலப் பதக்கத்திற்குத் தேர்வு செய்யப்படலான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை சிகா அமலாஹா பரிசோதனை ஏ-சாம்பிளில் அமிலோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரைட் தியாசைட் என்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஆனாலும் இவரது பி-சாம்பிள்கள் அதனை உறுதி செய்தால் மட்டுமே பதக்கம் பறிக்கப்படும் என்று காமன்வெல்த் விளையாட்டுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலதிகாரி மைக் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.