Published : 18 Aug 2023 07:21 AM
Last Updated : 18 Aug 2023 07:21 AM
மும்பை: புரோ கபடி லீக் 10-வது சீசன் வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இரு வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் கேரவேன் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 8-வது சீசன் போட்டிகள் பெங்களூருவில் மட்டும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 9-வது சீசன் போட்டிகள் பெங்களூரு, புனே, ஹைதராபாத், மும்பை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்றன. இம்முறை 10-வது சீசன் போட்டிகள் 12 அணிகளை மையமாக கொண்ட நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் செப்டம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. போட்டிக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT