Published : 11 Dec 2017 10:10 AM
Last Updated : 11 Dec 2017 10:10 AM

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

புவனேஷ்வரில் நடைபெற்ற இந்தத் தொடரில் நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. 21-வது நிமிடத்தில் சோமர்பேட் சுனில் அடித்த பீல்டு கோலால் 2-வது கால் பகுதியின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.

3-வது கால் பகுதி தொடங்கிய 6-வது நிமிடத்தில் ஜெர்மனி பதிலடி கொடுத்தது. மார்க் அப்பெல் அடித்த பீல்டு கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் கடைசி பகுதி பரபரப்பானது. 54-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் ஹர்மான்பிரீத் சிங் கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x