காவல் துறையினருக்கான சர்வதேச போட்டி: 41 பதக்கங்கள் குவித்தனர் தமிழக போலீஸார்

கனடாவில் நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கனடாவில் நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Updated on
1 min read

சென்னை: கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

சுமார் 50 நாடுகளிலிருந்து 8,500-க்கும் அதிகமான காவல் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரில் தமிழ்நாடு காவல் துறை தடகள அணியைச் சேர்ந்த காவல்கண்காணிப்பாளர் ஏ. மயில்வாகனன், காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, எஸ். சரவணப் பிரபு, கே. கலைச்செல்வன், ஆர்.சாம் சுந்தர், என்.விமல் குமார், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வி. கிருஷ்ணமூர்த்தி, கே.பாலு, தலைமை காவலர்கள் பி.சந்துரு, எஸ்.சுரேஷ்குமார், சி.யுவராஜ், டி. தேவராஜன், மகளிர் தலைமை காவலர்கள் எம்.லீலா, ஆர். பிரமிளா, டி. தமிழரசி ஆகிய 15 பேர் பல்வேறு போட்டிகளில் பொதுப்பிரிவில் பங்கேற்று, 15 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண்கலம், என மொத்தம் 41 பதக்கங்களை வென்றனர்.

வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) எச்.எம். ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in