

பாகு: அஜர்பைஜானின் பாகு நகரில் ஃபிடே உலக கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், 8-ம் நிலை வீரரான இந்தியாவின் டி.குகேஷை எதிர்த்து விளையாடினார். இதில் 49-வது காய் நகர்த்தலின் போது கார்ல்சன் வெற்றி பெற்று முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார்.
கால் இறுதி சுற்று இரு ஆட்டங்களை உள்ளடக்கியதாகும். 2-வது ஆட்டத்தில் கார்ல்சன் டிரா செய்தாலே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி விடலாம்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா மோதினார்கள். இதில் 53வது நகர்த்தலின் போது அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அவர், அதிகரித்துக்கொண்டார்.
மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தி தனது கால் இறுதி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 109வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இவரும் தலா 0.5 புள்ளிகள் பெற்றனர்.