Published : 15 Nov 2017 07:08 PM
Last Updated : 15 Nov 2017 07:08 PM

‘லேடி ஷேன் வார்ன்’- ஆஸி. மகளிர் அணி லெக்ஸ்பின்னரின் திகைக்க வைத்த பந்து

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் அமந்தா வெலிங்டன், ஷேன் வார்ன், மைக் கேட்டிங்குக்கு வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்து போன்ற ஒரு பந்தை வீசி அசத்தியுள்ளார்.

இந்த பவுல்டு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும், இங்கிலாந்து மகளிர் அணிக்கும் பகலிரவு ஒன் ஆஃப் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அதன் கடைசி நாளான இன்று ஆஸி. லெக் ஸ்பின்னர் அமந்தா வெலிங்டன், இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டாமி பியூமான் என்பவருக்கு அருமையான லெக் ஸ்பின் பந்தை வீசி பவுல்டு செய்தார்.

இந்தக் காட்சி அச்சு அசலாக அப்படியே ஷேன் வார்ன், இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்குக்கு வீசிய அதே பந்து போல் அமைந்தது. லெக்ஸ்டம்பில் பிட்ச் ஆன பந்து ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்தது.

ஆனாலும் ஆஸ்திரேலியாவினால் போட்டியை வெல்ல முடியவில்லை ஆட்ட முடிவில் இங்கிலாந்து 206/2 என்று வலுவான நிலையில் இருக்க ட்ரா ஆனது.

ஷேன் வார்ன் 1993-ம் ஆண்டு வீசிய அந்தப் பந்து இன்று வரை ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்படுகிறது. தற்போது அமந்தா வெலிங்டன் பந்து அந்த மாதிரி பெயரைப் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, லேடி ஷேன் வார்ன் என்று இவரை அழைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x