முன்னாள் இலங்கை வீரர் வெளிநாடு செல்ல தடை

சசித்ர சேனநாயகே
சசித்ர சேனநாயகே
Updated on
1 min read

கொழும்பு: சூதாட்ட புகாரில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான சசித்ர சேனநாயகே வெளிநாடு செல்ல தடைவிதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

38 வயதான சசித்ர சேனநாயகே, இலங்கை அணிக்காக 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் 49 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு டெஸ்ட் போட்டி, 24 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2020-ம்ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சேனநாயகே மூன்று மாத காலம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 3 மாத காலத்துக்கு சசித்ரா சேனநாயகே வெளிநாடு பயணம் செய்ய தடை விதித்துள்ள கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இதுதொடர்பான உத்தரவை குடியேற்றம் மற்றும் குடியமர்வு பிரிவு பொதுக் கட்டுப்பாட்டாளர் துறைக்கு அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை அட்டர்னி ஜெனரல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சேனநாயகே மீது சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பிரிவுக்கு உத்தரவை நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in