Published : 14 Aug 2023 09:53 PM
Last Updated : 14 Aug 2023 09:53 PM

‘நன்றி சஞ்சு சாம்சன்’ - மோசமான ஆட்டம் காரணமாக ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

சஞ்சு சாம்சன்

சென்னை: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் மோசமான பேட்டிங் காரணமாக ரன் சேர்க்க தடுமாறிய இந்திய வீரர் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

28 வயதான சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் நெடு நாட்களாக குரல் கொடுத்து வந்தனர். அவருக்கு ஆதரவுக் குரல் உலகம் முழுவதும் ஒலித்தது. இந்த சூழலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அவர் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முறையே 19 பந்துகளில் 9 ரன்கள் மற்றும் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். 5 போட்டிகள் டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். அதில் 12, 7, பேட் செய்யும் வாய்ப்பு பெறவில்லை (3 மற்றும் 4-வது போட்டி), 13 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் தான் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்துள்ளனர்.

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என சொல்வார்கள். இதோ வாய்ப்புகளை அவர் இப்படித்தான் வீணடிக்கிறார் என ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘நன்றி சஞ்சு சாம்சன்’ என ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் பகிர்ந்துள்ள படத்தில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது போல குறிப்பிட்டுள்ளார்.

வரும் 18-ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார்.

— Aufridi Chumtya (@ShuhidAufridi) August 13, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x