

செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.
இலங்கை அணியான சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடப்போவதில்லை என்று மலிங்கா அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷந்த ரணதுங்கா இது பற்றிக் கூறும் போது, “நாங்கள் அவர் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடுவதை விரும்பினோம் ஆனால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் இடையேயான ஒப்பந்தத்தின் படி வீரர்கள் தங்கள் விருப்பப்படி அணியைத் தேர்வு செய்து கொள்ளலாம் அதன் படி மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்” என்றார்.
சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி இலங்கை உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சாம்பியன் அணியாகும். இதன் கேப்டன் மலிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.