ராகுல் - ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் பயிற்சியை பார்த்து ரசித்த ரிஷப் பந்த்!

ராகுல் - ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் பயிற்சியை பார்த்து ரசித்த ரிஷப் பந்த்!
Updated on
1 min read

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என இருவரும் இணைந்து பயிற்சி ஆட்டத்தில் பேட் செய்தனர். அதைப் பார்த்து ரசித்த ரிஷப் பந்த், அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இவர்கள் மூவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளனர். கே.எல்.ராகுலுக்கு கடந்த ஐபிஎல் சீசனின் போது காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து அவர் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரும் தற்போது தேசிய அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் என இருவரும் காயத்திலிருந்து மீண்டு, உடலினை உறுதி செய்து, ஆட்டத்துக்கு தேவையான உடல் திறனை மேம்படுத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் அவர்கள் இருவரும் இணைந்து பேட்டிங் செய்த பயிற்சி ஆட்டத்தின் வீடியோவை ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியை பார்த்ததாக அவர் தெரிவித்தார். பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in