திருப்பதி | ஏழுமலையானை தரிசனம் செய்த ரோஹித் சர்மா

திருப்பதி | ஏழுமலையானை தரிசனம் செய்த ரோஹித் சர்மா
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தனது குடும்பத்தினருடன் தரிசித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. விரைவில் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில் அவர் திருப்பதி வந்திருந்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்திருந்தனர். அவருக்கு பட்டுத் துணி அங்கவஸ்தரம் அணிவித்து, தீர்த்தம் வழங்கி இருந்தனர் அர்ச்சகர்கள். தரிசனத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக அழைத்து வந்த காவலர்கள், காரில் ஏறி செல்ல உதவினர். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. அவரது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவும் அவருடன் இருந்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடவில்லை. இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள காரணத்தால் அதில் கவனம் செலுத்தும் வகையில் டி20 போட்டிகளில் விளையாடவில்லை என அண்மையில் ரோஹித் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in