துராந்த் கோப்பை கால்பந்து | 1,658 நாட்களுக்குப் பின்னர் மோகன் பகான் அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்

துராந்த் கோப்பை கால்பந்து | 1,658 நாட்களுக்குப் பின்னர் மோகன் பகான் அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்
Updated on
1 min read

கொல்கத்தா: துராந்த் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி, மோகன் பகான் அணியை வீழ்த்தியுள்ளது.

துராந்த் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் நந்தகுமார் சேகர் ஒரு கோலடித்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே, ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கணக்கில் மோகன் பகானை வீழ்த்தியது.

1,658 நாட்களுக்குப் பின்னர் (சுமார் 4 ஆண்டுகள், 6 மாதங்கள்) மோகன் பகான் அணியை ஈஸ்ட் பெங்கால் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மோகன் பகான் அணியை, ஈஸ்ட் பெங்கால் அணி 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி ஐ லீக் கால்பந்துப் போட்டியில் வீழ்த்தியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in