WI vs IND 4-வது டி20 | அசத்திய ஓப்பனிங் ஜோடி - மேற்கு இந்திய தீவுகளை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

WI vs IND 4-வது டி20 | அசத்திய ஓப்பனிங் ஜோடி - மேற்கு இந்திய தீவுகளை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி
Updated on
1 min read

புளோரிடா: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 179 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி 39 பந்தில் 61 ரன்களை குவித்தார். ஷாய் ஹோப் 45 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சஹால், அக்சர் படேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் அதிரடியாக ஆடினர். இருவரும் ஜெட் வேகத்தில் ரன் ரேட்டை உயர்த்தியதுடன் அடுத்தடுத்து அரைசதம் பதிவு செய்தனர். 165 ரன்களை சேர்த்த பிறகே இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 77 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் முதல் விக்கெட்டாக வெளியேறினார். எனினும் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in