

வருமான வரித்துறை சோதனை குறித்து பேட்டி அளித்த திவாகரன் தங்கள் அணியின் ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று தெரிவித்தார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், என் கல்லூரியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை.
ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுத்த வீடியோ ஆதாரம் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்கள் கடமையைச் செய்கிறார்கள், சோதனை குறித்து கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றதை அடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்த அவர் தங்கள் அணியின் ஸ்லீப்பர் செல்கள் குறித்த கேள்விக்கு, பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும் போது ஸ்லீப்பர் செல்கள் தானாக வெளியே வருவார்கள் என்று தெரிவித்தார்.