ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | IND vs PAK போட்டியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | IND vs PAK போட்டியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்திய ஹாக்கி அணி. இந்தப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இந்த போட்டியில் களம் காண்கிறது பாகிஸ்தான் அணி.

இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை தொடங்கி வைக்கிறார். உலகத் தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்திலும் பாகிஸ்தான் அணி 16-வது இடத்திலும் உள்ளது. இருந்தாலும் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in