இனி கட், புல், ட்ரைவ் என்று ஷாட்கள் பறக்குமா? - மட்டையில் சிறு மாற்றம் செய்த விராட் கோலி

இனி கட், புல், ட்ரைவ் என்று ஷாட்கள் பறக்குமா? - மட்டையில் சிறு மாற்றம் செய்த விராட் கோலி
Updated on
1 min read

ட்ரைவ், புல்ஷாட், கட்ஷாட் என்று நேர் மட்டை, குறுக்குவாகு மட்டை ஷாட்களை சிரமமின்றி ஆடுவதற்காக விராட் கோலி தன் மட்டை கைப்பிடியில் மாற்றம் செய்துள்ளார்.

அதாவது கால்நகர்த்தலுடன் மட்டையை பந்துக்குக் கொண்டு வரும் மட்டை சுழற்றலும் ஒருங்கிணைய வேண்டும்.

இதனையடுத்து மட்டைக் கைப்பிடியின் மேல்பகுதியை சிரைத்துச் சிறிதாக்கியுள்ளார் விராட் கோலி, அவருக்காக இதனைச் செய்தது பெங்கால் கிரிக்கெட் சங்க உறுப்பினர் ஒருவர்.

முன்னங்காலை முன்னால் நகர்த்தி கொஞ்சம் மடக்கி ட்ரைவ் ஆடும் போது மட்டையும் காலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய ட்ரைவ்கள் கோலிக்கு சில சமயங்களில் சிரமங்களைக் கொடுத்துள்ளன.

மட்டையை பின்னாலிலிருந்து கொண்டு வருவது இப்போது குட்டையான கைப்பிடியினால் கொஞ்சம் விரைவானதாக மாறும். பவுன்ஸ் அதிகமான பிட்ச்களில் மட்டையை கிடைக்கோட்டு மட்டமாக வைத்து ஆடும் கட், புல் ஷாட்களுக்கும் இந்த குட்டை கைப்பிடி உதவும்.

கொல்கத்தாவில் நாளை (வெள்ளிக்கிழமை) டெஸ்ட் தொடங்குகிறது, பிட்ச் உயிரோட்டமுள்ள பிட்சாக இருக்கும் என்பதால் பின்னங்காலில் சென்று தடுத்தும் அடித்தும் ஆடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் கோலி. ஒரு வேளை தென் ஆப்பிரிக்க தொடர் ஏற்கெனவே அவர் மனதில் ஆடத் தொடங்கியுள்ளதோ என்னவோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in