Published : 09 Aug 2023 06:40 AM
Last Updated : 09 Aug 2023 06:40 AM

உலக தடகளப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

நீரஜ் சோப்ரா | கோப்புப்படம்

புதுடெல்லி: உலக தடகளப் போட்டி ஹங்கேரி நாட்டிலுள்ள புடாபெஸ்ட் நகரில் ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய தடகள அணி தேர்வு நேற்று நடைபெற்றது.

போட்டிக்கான அணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை வகிப்பார். 28 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. புடாபெஸ்ட் நகரில் 27-ம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளது. காயம் காரணமாக குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் விலகியுள்ளார்.

இதேபோல் உயரம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்த தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்ட வீராங்கனை கே.எம்.சந்தா, 20 கி.மீ. நடை பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோரும் உலக தடகளப் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இவர்கள் மூவரும் சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இருப்பதால், உலக தடகளப் போட்டியில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.

அணி விவரம் - மகளிர்: ஜோதி யார்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னுராணி (ஈட்டி எறிதல்), பாவ்னா ஜாட் (20 கி.மீ. நடைப் போட்டி).

ஆடவர்: கிருஷன் குமார் (800 மீட்டர்), அஜய் குமார் சரோஜ் (1,500 மீட்டர்), சந்தோஷ் குமார் தமிழரசன் (400 மீ. தடைஓட்டம்), அவினாஷ் முகுந்த் சாப்லே (3 ஆயிரம் மீ. ஸ்டீபிள் சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), எம்.சங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல் (மும்முறை தாண்டுதல்), அப்துல்லா அபுபக்கர் (மும்முறைத் தாண்டுதல்), எல்டோஸ் பால் (மும்முறைத் தாண்டுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்0, டி.பி. மனு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் ஜேனா (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங் (20 கி.மீ. நடைப் போட்டி), விகாஷ் சிங் (20 கிலோமீட்டர் நடைப் போட்டி), பரம்ஜீத் சிங் (20 கி.மீ. நடைப் போட்டி), ராம் பாபு (35 கிலோமீட்டர் நடைப் போட்டி), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x