Published : 09 Aug 2023 06:58 AM
Last Updated : 09 Aug 2023 06:58 AM

தரவரிசையில் பி.வி.சிந்து முன்னேற்றம்

பி.வி.சிந்து | கோப்புப்படம்

புதுடெல்லி: பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து இரு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து இரு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் சிந்து, கால் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தார். இதனால் தரவரிசையில் அவர், முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஓர் இடம் பின்தங்கி 20-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த், கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்திருந்தார். இந்த தொடரில் இறுதி சுற்று வரை முன்னேறிய ஹெச்.எஸ்.பிரனோய் 9-வது இடத்தில் தொடர்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x