Published : 09 Aug 2023 07:13 AM
Last Updated : 09 Aug 2023 07:13 AM
ஈரோடு: பிரான்ஸின் பார்டியூஸ் நகரில் ஜூலை 31-ம் தேதி முதல், கடந்த 6-ம் தேதி வரை சர்வதேச அளவிலான ‘கிரேயோன் ஓபன் 2023’ செஸ் போட்டி நடந்தது. இதில், 9 நாடுகளைச் சேர்ந்த 113 சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இனியன் முதல் இடத்தைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மற்றொரு, இந்திய கிராண்ட் மாஸ்டர் பரத் சுப்ரமணியம் 2-ம் இடமும், பிரான்ஸின் சர்வதேச மாஸ்டர் கேரல் ஜோசப் 3-ம் இடமும் பிடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT