

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 11 ரூபாய் அதிகரித்து 2,823 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,812 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 11 ரூபாய் அதிகரித்து 2,823 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,584 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கம் கிராம் 2,964 ரூபாய்க்கும், சவரன் 23,712 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 43 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.