Published : 25 Nov 2017 10:20 AM
Last Updated : 25 Nov 2017 10:20 AM

பிஸ்டோரியஸ் தண்டனை இருமடங்காக அதிகரிப்பு

காதலியை கொன்ற வழக்கில் பாரா தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் சிறைத் தண்டனையை 13 வருடங்களாக அதிகரித்து தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலியான ரவீனா ஸ்டீன்கேம்பை துப்பாக்கியால் சுட்டு பிஸ்டோரியஸ் கொலை செய்திருந்தார்.

வீட்டில் திருடன் புகுந்ததாக தவறுதலாக நினைத்து சுட்டதாக விசாரணையின் போது பிஸ்டோரியஸ் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு 2014-ம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தண்டனை காலத்தை அதிகரிக்கும்படி புளூம்போன்டைன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிஸ்டோரியஸின் சிறைத் தண்டனையை 13 வருடங்கள் 5 மாதங்களாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. - ஏஎப்பி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x