ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | சீனா - தென் கொரியா ஆட்டம் டிரா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | சீனா - தென் கொரியா ஆட்டம் டிரா
Updated on
1 min read

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் சீனாவுடன், தென் கொரிய அணி டிரா செய்தது.

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, தென் கொரியா ஆகிய அணிகள் மோதின.ஆரம்பம் முதலே கொரிய அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. கொரியாவின் ஜாங்ஹியுன் ஜாங், ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இந்த கோலை பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் அடித்தார் ஜாங்ஹியுன் ஜாங். இதற்கு சீனா, 43-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. அந்த அணி வீரர் சாங்காங் சென், ஃபீல்டு கோலடித்தார். இதனால் ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோலடிக்க பெரு முயற்சி செய்தும் கோல் விழவில்லை.

இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே, ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து சீனா தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. கொரியா அணி தனது அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in