

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். அவர், 8.22 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பிடித்தார். இந்த தொடர் உலக தடகள சுற்றுப்பயணத்தில் வெண்கல நிலை போட்டியாகும்.
ஜெஸ்வின் ஆல்ட்ரினின் 4-வது சிறந்த செயல்திறன் இதுவாகும். 21 வயதான அவர், கடந்த மார்ச் 2-ம் தேதி பெல்லாரியில் நடைபெற்ற தேசிய ஓபன் நீளம் தாண்டுதல் போட்டியில் 8.42 மீட்டர் தூரம் நீளம் தாண்டி அசத்தி இருந்தார். தொடர்ந்து மே மாதம் கியூபாவில் நடைபெற்ற போட்டியில் இரு முறை 8 மீட்டருக்கு மேல் நீளம் தாண்டியிருந்தார்.