கிருஷ்ணா நதி விபத்து: மகளின் உடலைப் பார்த்து தாய் மாரடைப்பால் மரணம்

கிருஷ்ணா நதி விபத்து: மகளின் உடலைப் பார்த்து தாய் மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read

கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான தனது மகளின் சடலத்தைப் பார்த்த தாய் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா  கிருஷ்ணா நதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்ததில்,  பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், இன்று காலை உயிரிழந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில், ஓங்கோலை சேர்ந்த லீலாவதி என்பவரின் சடலத்தை பார்த்து அவரது தாயார் லட்சுமி காந்தம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் இவர்களது வீட்டில் சோகம் இரட்டிப்பானது.இந்த படகு விபத்து பலரது குடும்பங்களை புரட்டி போட்டுள்ளது. கணவன், மனைவி, தாய், தந்தையை இழந்த பலர் மருத்துவமனை முன் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in