Published : 04 Aug 2023 06:01 AM
Last Updated : 04 Aug 2023 06:01 AM

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதியில் சிந்து

பி.வி.சிந்து

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த ஆகர்ஷி காஷ்யப்புடன் மோதினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் அமெரிக்காவின் பெய்வன் ஜாங்குடன் மோதுகிறார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 31-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், 28-ம் நிலை வீரரான சீன தைபேவின் வாங் ஸு வெயுடன் மோதினார். 59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரியஷு ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x