

அர்ஜென்டீனாவை வீழ்த்தி உலகக் கோப்பையை ஜெர்மனி கைப்பற்றியது. இந்த ஆட்டம் சமூக வலைத்தளங்களின் குறும்பதிவுகளில் சாதனை படைத்தது.
நிமிடத்திற்கு பதிவு செய்யப்பட்ட ட்வீட்களின் எண்ணிக்கையில் இந்த இறுதிப்போட்டி சாதனை படைத்துள்ளது. 113வது நிமிடத்தில் ஜெர்மனி கோட்ச மூலம் வெற்றி கோலை அடித்த பிறகு ஒரு நிமிடத்தில் மொத்தம் 618,725 ட்வீட்கள் பதிவாகியுள்ளது.
பிரேசில் 1- 7 என்று தோல்வி தழுவிய அரையிறுதிப் போட்டியின் போது நிமிடத்திற்கு 5,80,000 டிவீட்கள் பதிவாகியிருந்தது. அதனை தற்போது இறுதிப் போட்டி முறியடித்தது.
ஆனால் ஆட்டத்தின் ஒட்டு மொத்த டிவீட்கள் எண்ணிக்கை 32.1 மில்லியன். இது பிரேசில்-ஜெர்மனி ஆட்டத்தின் போது 35.6 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஃபேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்ட விளையாட்டு நிகழ்வாக இந்த இறுதிப்போட்டி அமைந்தது. 88 மில்லியன் பயனாளர்கள் இட்ட கருத்துக்கள், லைக்குகள் மற்றும் நிலைத்தகவல்கள் அடங்கிய பகிர்வுகள் 280 மில்லியன்கள் ஆகும்.