உலகக் கோப்பை கால்பந்து - ஹைதியை வீழ்த்திய சீன மகளிர் அணி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியை சக வீராங்கனைகளுடன் கொண்டாடும் சீன வீராங்கனை வாங் ஷுவாங். படம்: ஏஎப்பி
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியை சக வீராங்கனைகளுடன் கொண்டாடும் சீன வீராங்கனை வாங் ஷுவாங். படம்: ஏஎப்பி
Updated on
1 min read

அடிலெய்ட்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தியது.

உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று அடிலெய்ட் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஹைதி மகளிர் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே சீன அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் முதல் பாதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 2-வது பாதியின்போது சீன வீராங்கனை வாங் ஷுவாங் கோலடித்தார். 74-வது நிமிடத்தில் இந்த கோல் விழுந்தது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 1-0 என்ற கோல் கணக்கில் சீன அணி வெற்றி கண்டது.

இங்கிலாந்து அபாரம்: இங்கிலாந்து, டென்மார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரன் ஜேம்ஸ் ஒரு கோலடித்தார். அதன் பிறகு எந்த கோலும் விழவில்லை. இறுதியில் இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in