

புதுச்சேரி: ஐபிஎல் 2023 சீசனில் அறிமுக வீரராக களம் கண்டார் அர்ஜுன் டெண்டுல்கர். சிக்ஸ் பேக் உடன் அவர் எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபியை பகிர்ந்துள்ளார். அது ஃபிட்னஸ் சார்ந்து அவரது ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
23 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது தியோதர் கோப்பைக்கான தொடரில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தச் சூழலில் சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக அவர் வைத்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில் போன்றவர்கள் ஃபிட்னஸ் சார்ந்து அதிக கவனம் செலுத்துபவர்கள். அவர்களது வழியில் அர்ஜுனும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார். 7 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள், 7 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 13 டி20 போட்டிகளில் அர்ஜுன் விளையாடி உள்ளார். ஐபிஎல் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடி இருந்தார். மொத்தம் 9.5 ஓவர்கள் வீசி 92 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.