

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் 5-வது போட்டி லண்டன் தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் விளையாடும் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் 4-வது போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இடம் பெற்றுள்ளனர். சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் அவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.