Published : 27 Jul 2023 08:23 AM
Last Updated : 27 Jul 2023 08:23 AM
புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் - பெங்களூரூ ஸ்மாஷர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரூ ஸ்மாஷர்ஸ் 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி தரப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரில் ஜெராசிமென்கோ, ஜீத் சந்திரா ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிரிவில் மணிகா பத்ராவும் வெற்றியை வசப்படுத்தினர். கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களை கோவா அணி வென்றது. பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த போதிலும் ஒட்டுமொத்தமாக 36 புள்ளிகளுடன் கோவா சாலஞ்சர்ஸ் முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT