

காமன்வெல்த் ஆடவர் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முகமது ஆசப் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தகுதிச்சுற்றில் 5-வது இடத்தைப் பிடித்த ஆசப், இறுதிச்சுற்றில் மால்டாவின் நாதனை பின்னுக்குத் தள்ளி 26 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தப் பிரிவில் இங்கிலாந்து வீரர்கள் ஸ்காட் தங்கப் பதக்கமும், பிரெஞ்ச் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அவர்கள் இருவரும் முறையே 30 மற்றும் 29 புள்ளிகளைப் பெற்றனர்.