Published : 26 Jul 2023 08:58 AM
Last Updated : 26 Jul 2023 08:58 AM

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த்

கிடாம்பி ஸ்ரீகாந்த்

டோகிக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-13, 21-13 என்ற நேர் செட்டில் தைவானின் ஷோ டியன் சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனோய் 21-17, 21-13 என்ற நேர் செட்டில் சீனாவின் லி ஷிபெங்கை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 17-21, 17-21 என்ற நேர் செட்டில் முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் வீழ்ந்தார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயகா ஹோபரா, சுய்சு ஜோடியை தோற்கடித்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர், ஷிக்கிரெட்டி ஜோடி 21-18, 9-21, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தைவானின் யே ஹாங் வீ, லீ சியா ஷின் ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x