ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்வு

ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்வு
Updated on
1 min read

நாட்டின் ஒட்டுமொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்க மதிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் உயர்ந்துள்ளது

நாட்டின் ஒட்டுமொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்க விகிதத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் 2.60 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்க விகிதம் கடந்த அக்டோபர் மாதத்தில் 3.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

முன்னதாக நாட்டின் விலைவாசியை குறிக்கும் சில்லறை பணவீக்க விகிதம் நேற்று வெளியானது. இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. செப்டம்பரில் 3.28 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம், 3.46 ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in