

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் கோலி சதம் பதிவு செய்தார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஜடேஜா மற்றும் அஸ்வின் அரைசதம் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா, 44 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால், 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கில், 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடிய இஷான் கிஷன், 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும். குறிப்பாக அவர் விளாசிய அந்த ஒற்றை கை சிக்ஸர் ரிஷப் பந்த் ஆட்டத்தை நினைவுப்படுத்தியது. 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி விரட்டி வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் அதிவேக 50