

லெபனான் தடகள சாம்பயின்ஷிப் பெய்ரூட்டில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி 55.32 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் கிஷோர் ஜென்னா 78.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால் சிங் 73.34 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்