

யோசுவா: கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கொரியாவின் யோசுவா நகரில் 500 புள்ளிகள் கொண்ட கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. சீன ஜோடிக்கு எதிராக சாட்விக், ஷிராக் ஜோடி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் இரு முறை அந்த ஜோடியிடம் இந்திய அணி ஜோடி தோல்வி கண்டிருந்து. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சாட்விக், ஷிராக் ஜோடி, இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்ஃபியன், முஹம்மது ரியான் ஆர்டியன்டோ ஜோடியுடன் மோதுகிறது.