ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இலச்சினை அறிமுகம்

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இலச்சினையை நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated on
1 min read

சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்த தொடருக்கான இலச்சினையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற்றது.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ‘பொம்மன்’ இலச்சினையை அறிமுகப்படுத்தினார்.தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கோப்பையை தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டும் செல்லும் வகையில் ‘பாஸ்தி பால்’ நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

பாஸ் தி பால் – கோப்பை சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக கோப்பை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in