

புதுச்சேரியில் கடந்து மூன்று நாட்களாக ஓய்ந்திருந்த மழை தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று நாட்காளாக ஓய்ந்திருந்த நிலையில், இன்று காலை (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியில் மட்டுமல்லாமல், புதுச்சேரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம், கன்னியக்கோவில், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட 16 பேர்கொண்ட குழுவினர் தொடர்ந்து தாழ்வான பகுதிகளி கண்காணித்து வருகின்றனர்.