Published : 19 Jul 2023 11:24 PM
Last Updated : 19 Jul 2023 11:24 PM
ஓல்ட் டிராஃபோர்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த நான்காவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு இச்சாதனையை இலங்கையின் முத்தையா முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (688) மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே (619) இந்த சாதனையை படைத்திருந்தனர். தற்போது இந்த எலைட் கிளப்பில் ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் இதில் அடக்கம். பிராட் 166வது டெஸ்டில் இந்தச் சாதனையை புரிந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கிறிஸ் பிராட்டின் மகனான ஸ்டூவர்ட் பிராட், 2007ல் மைக்கேல் வாகன் தலைமையில் இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பள்ளிக் காலத்தின்போது பேட்ஸ்மேனாக கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பிராட் மிகத் தாமதமாகவே பந்துவீச்சு பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
சர்வதேச அளவில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களை புகழ் பெற்ற பிராட் இதுவரை 20 முறைக்கும் மேல் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முறை 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் 2015ல் ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்த ஆஷஸ் போட்டியில் ஆன்டர்சன் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை வந்தபோது தனியொரு ஆளாக போராடி 8-15 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய விக்கெட்களை வீழ்த்தி அணியை வெற்றி பெறவைத்தார் பிராட். இப்போட்டி அவரின் கிரிக்கெட் கரியரில் மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. இரண்டு டெஸ்ட் ஹாட்ரிக் எடுத்த ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT